சிம்லா :
ஹிமாச்சல பிரதேச மாநிலம் ரோதங் பாஸில் கடல் மட்டத்தில் இருந்து 10,000 அடிக்கு மேல் அமைக்கப்பட்டுள்ள உலகின் நீளமான சுரங்கப்பாதையை சனிக்கிழமையன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
உலகின் மிக உயரமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள 9.02 கி.மீ. நீளமுள்ள இந்த சுரங்கப்பாதை மூலம் ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தில் இருந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு செல்வதற்கான பயண தூரம் மற்றும் நேரம் குறைவதுடன், அனைத்து பருவநிலையிலும் பயன்படுத்தக் கூடியதாக உள்ளது.

இந்த சுரங்கப்பாதையை திறந்து வைத்து, இதில் சிறிது தூரம் வாகனத்தில் பயணம் செய்த பிரதமர் மோடி பின் இதில் சிறிது தூரம் நடந்து சென்று பார்வையிட்டார், அப்போது அங்கிருந்த பத்திரிகையாளர்கள் அவரை புகைப்படம் எடுத்தனர், பிரதமர் மோடி வழக்கம் போல் மக்களை பார்த்து கைஅசைப்பது போல் போஸ் கொடுத்தது, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


சிலருக்கு தங்கள் முன் வெறுமையாக இருப்பது சந்தோஷமா இருந்தால் கை அசைப்பார்கள் என்றும், யாருக்கு கை அசைத்தார் மோடி என்றும் கேள்வி கேட்கும் நெட்டிசன்கள், தொலைநோக்கு பார்வையுடன் செயல்படும் மோடி, பின்னாளில் இந்த சுரங்கப்பாதை வழியாக பயணிக்க போகும் பயணிகளுக்காக கையசைத்திருப்பார் என்றும் கிண்டலடித்து வருகின்றனர்.


யாருமே இல்லாத சுரங்கப் பாதையில யாருக்கு கை அசைத்தார் மோடி ? என்பது, பிரதமர் மோடியின் கடமையுணர்ச்சி குறித்து பெருமையாக பேசிவரும் அவரது தீவிர ஆதரவாளர்களுக்கு கூட புரியாதா புதிராக உள்ளது என்பது தான் வேடிக்கை.

[youtube-feed feed=1]