டில்லி

மோடியின் பிரதம்ர் பதவி ஏற்பு விழாவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி பங்கேற்க உள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற மோடி இரண்டாம் முறையாக ஆட்சி அமைக்க உள்ளார். நாளை மாலை 7 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகயில் நடைபெறும் விழாவில் மோடி பிரதமராக பதவி ஏற்கிறார். இந்த விழாவுக்கு உலக தலைவர்கள், கட்சி தலைவர்கள், என பல்வகைப்பட்ட சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உலகத் தலைவர்கள் வரிசையில் பிம்ஸ்டெக் அமைப்பின் அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. மேற்கு வஙக் முதல்வர் மம்தா பானர்ஜி முதலில் இந்த அழைப்பை ஏற்றார். அதன் பிறகு விழாவில் பங்கேற்க போவதில்லை என அறிவித்துள்ளார்.

 

திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு அழைப்பு அனுப்பப் பட்டதாக வந்த தகவலை டி ஆர் பாலு மறுத்துள்ளார்.

 

நாளை மாலை நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

 

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வரிசையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் மோடியின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க போவதில்லை என அறிவித்துள்ளார்.