சிவன் கோவிலில் வைக்கப்பட்டிருந்த மோடி சிலை உடைப்பு: உ.பி.யில் பரபரப்பு

சிலையில் உடைக்கப்பட்ட மோடியின் மூக்கு (வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது)

லக்னோ:

த்தரபிரதேசத்தில் கவுசம்பி மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடியின் சிலை வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், அந்த சிலையின்  மூக்கு உடைந்து காணப்பட்டது. இதன் காரணமாக அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

உத்திரபிரதேச மாநிலத்தில் கவுசம்பி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு  மோடிக்கு சிலை வைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து நாடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று  பிரதமராக பதவி ஏற்க வேண்டும் என்று வேண்டுதல் செய்து, அம்மாநில பாஜக தலைவர் பஜனேந்திர மிஸ்ரா சிலையை நிறுவி, தினகரி பூஜை செய்து வந்தார். அந்த கிராமத்தினரும் மோடியின் சிலையை வணங்கி வந்தனர்.

இந்நிலையில் திரிபுராவில் பாஜக வெற்றி பெற்றதும் லெனின் சிலை அகற்றப்பட்டது போன்ற பல்வேறு சிலைகள் சேதப்படுத்தப்பட்ட நிலையில், சிவன் கோவிலில் இருந்து மோடியின் சிலையின் மூக்கையும் மர்ம நபர்கள் யாரோ உடைத்துள்ளனர்.

இதன் காரணமாக அந்த பகுதியில்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், மோடியின் மூக்கை உடைத்தது யார் என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags: Modi statue found damaged in UP village, சிவன் கோவிலில் வைக்கப்பட்டிருந்த மோடி சிலை உடைப்பு: உ.பி.யில் பரபரப்பு