டில்லி

ந்தியத் தொழில்நுட்ப வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவு (ஏ ஐ) முக்கிய பங்கு வகிக்கும் எனப் பிரதமர் மோடி கூறி உள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஓப்பன் ஏ ஐ நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சாட்ஜிபிடி மென்பொருளை அறிமுகம் செய்தது. இந்நிகழ்வு செயற்கை நுண்ணறிவு  (ஏ ஐ) தொழில்நுட்பத்தை அடிப்படையாக் கொண்டு செயல்படும் சாட்ஜிபிடி, இணையக் கட்டமைப்பில் மிகப் பெரும் பாய்ச்சலாகப் பார்க்கப்படுகிறது.

ஓப்பன் ஏ ஐ நிறுவனத்தின் நிறுவனரும் அதன் தலைமைச் செயல் அதிகாரியுமான சாம் ஆல்ட்மேன் இந்தியா வந்துள்ளார். நேற்று அவர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். இது குறித்த புகைப்படத்தை தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஆல்ட்மேன், “இந்தியாவின் தொழில்நுட்பக் கட்டமைப்புக் குறித்தும், ஏ ஐ மூலம் இந்தியா அடையும் பலன் குறித்தும் நரேந்திர மோடியுடன் மிகச் சிறந்த உரையாடல் நிகழ்ந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரது டிவிட்டுக்கு பிரதமர் மோடி

“ஆழமான உரையாடலுக்கு நன்றி சாம் ஆல்ட்மேன். இந்தியாவின் தொழில்நுட்பக் கட்டமைப்பை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்திச் செல்வதில் ஏ ஐ முக்கிய பங்காற்றும். குறிப்பாக இளைய தலைமுறையினர் மத்தியில் ஏஐ பெரும் தாக்கம் செலுத்தும். இந்திய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையிலான டிஜிட்டல் மாற்றத்தை முடுக்கிவிடும் அனைத்து வாய்ப்புகளையும் நாங்கள் வரவேற்கிறோம்”

என்று பதில் அளித்துள்ளார்..