இந்தியர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் பட்ஜெட் : மோடி புகழுரை

Must read

டில்லி

ன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை இந்தியர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார்.

மத்திய நிதிநிலை அறிக்கையை இன்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.    இந்த பட்ஜெட் டில் புதுமை ஒன்றும் இல்லை எனவும் ஏமாற்றத்தை தருவதாகவும் எதிர்க்கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி இந்த நிதிநிலை அறிக்கையை மிகவும் பாராட்டி உள்ளார்.  அவர். “இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கை நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்தும் விதத்தில் உள்ளது.  இந்த நிதிநிலை அறிக்கையானது  விவசாயிகளின் அச்சம் போக்கப்பட்டு அனைத்துத் துறையினருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு புதிய இந்தியாவ வலுப்படுத்தும் வகையில் உள்ளது.    பல்லாயிரக்கணக்கான ஏழை மக்களுக்கான புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டு மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் விதமாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது”  எனக் கூறி உள்ளார்.

More articles

Latest article