டில்லி

பிரதமர் மோடி மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஒருமனதாக நிறைவேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் உரையாற்றிய போது,

“140 கோடி இந்தியர்களின் உணர்வுகளை புதிய நாடாளுமன்றம் பிரதிபலிக்கிறது. நாம் புதிய அத்தியாயத்தை நாம் தொடங்குச்ற்ள் கடந்த கால கசப்புணர்வுகளை மறந்து விடுவோம்.  நீங்கல்  புதிய கட்டிடத்தில் நீங்கள் முன்வைக்கும் கருத்துகள், அடுத்த தலைமுறைக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

பல ஆண்டுகளாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பாக விவாதம் நடந்து வருகிறது. இம்மசோதா கடந்த 1996-ம் ஆண்டு முதல்முறையாக இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டும் நிறைவேற்ற முடியவில்லை.  இதே மசோதாவை வாஜ்பாய் ஆட்சிக்காலத்திலும் இம்மசோதாவை நிறைவேற்றப் பலதடவை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, போதிய ஆதரவு இல்லாததால், நிறைவேற்ற முடியவில்லை என்பதால் கனவு நனவாகாமலே இருந்தது.  தற்போது கடவுள் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் அந்த பணிக்கு என்னை தேர்வு செய்துள்ளார். இதற்காக நடவடிக்கை எடுத்து. மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அம்மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அவ்வகையில், செப்டம்பர் 19-ந் தேதி, வரலாற்றில் பொறிக்கப்பட இருக்கிறது.

பெண்கள் ஒவ்வொரு துறையிலும் முன்னேறி வரும் நிலையில், கொள்கை முடிவு எடுப்பதிலும் அவர்களுக்கு அதிகபட்ச பங்கு இருக்க வேண்டும். எனவே பெண்கள் தலைமையிலான முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக, அரசியல் சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்கிறோம். ஜனநாயகம் இதனால் வலுவாகும்.

நாங்கள் இம்மசோதாவைச் சட்டமாக்க உறுதி பூண்டுள்ளோம் என்று தாய்மார்களுக்கும், மகள்களுக்கும் உறுதி அளிக்கிறேன். எனவே மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றித் தருமாறு இரு அவை உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கிறேன்”

என்று தெரிவித்துள்ளார்.