அபுதாபி
ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபிக்கு சென்றுள்ள மோடி அந்நாட்டுடன் 5 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.
பிரதமர் மோடிக்கு அபுதாபியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பட்டத்து இளவரசர் அவரை விமானநிலையத்துக்கு வந்து கட்டித் தழுவி வரவேற்றார். பிறகு இருவரும் அரண்மைனையில் சந்தித்துக் கொண்டனர்.
இவ்வாறு சந்திப்புக்கு அழைக்கப்படும் முதல் வெளிநாட்டுத் தலைவர் என்னும் பெருமையை மோடி பெற்றுள்ளார். ஐக்கிய அமீரகத்துக்கு இது மோடியின் இரண்டாவது பயணம் ஆகும்.
ஆலோசனைக்கு பிறகு ரெயில்வே, எரிசக்தி, நிதி உதவி உள்ளிட்ட 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. இந்த பயணத்தின் முக்கிய நிகழ்வாக இந்த ஒப்பந்தங்கள் கருதப் படுகின்றன.
இதைத் தொடர்ந்து அபுதாபியில் கட்டப்பட உள்ள முதல் இந்துக் கோவிலுக்கு மோடி இன்று அடிக்கல் நாட்ட உள்ளார்.