டில்லி
ஓட்டுநர் இல்லாமல் தானியங்கி முறையில் ஓடும் மெட்ரோ ரயில் சேவை இந்தியாவில் முதல் முறையாக பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பெருநகரங்களில் மெட்ரோ ரயில் சேவை வெற்றிகரமாக இயங்கி வருகிறது. நகரங்களில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவும் மெட்ரோ ரயில் சேவையில் பல புதிய தொழில் நுட்பங்கள் அறிமுகமாகி வருகிறது.
அவ்வகையில் இந்தியாவில் முதல் முறையாகத் தானியங்கி மெட்ரோ ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த தானியங்கி ரயில் சேவை ஓட்டுநர் இன்றி இயக்கப்படுகிறது. இந்த சேவையைக் காணொளி மூலம் இன்று காலை 11 மணிக்குப் பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.
இந்த ரய்ல் சேவை மஜ்லிஸ் பூங்கா முதல் ஷிவ் விகார வரையிலான வழித்தடத்தில் இயங்க உள்ளது. அத்துடன் அனைத்து வழித்தடங்களிலும் பயன்படுத்தக்கூடிய தேசிய பயணிகள் பொது அட்டையையும் மோடி அறிமுகம் செய்துள்ளார்.