டில்லி
இன்றைய தேசிய பத்திரிகையாளர் தினத்தையொட்டி பிரதமர் மோடி பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளர்.
இன்று தேசிய பத்திரிகையாளர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுளார். அதில் ”தேசிய பத்திரிகையாளர் தினத்தை ஒட்டி அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஊடகங்களின் பணி மிகவும் பாராட்டுக்குரியது. தூய்மை இந்தியா திட்டம் வளர்ச்சி அடைந்தது பத்திர்கையாளர்கள் அதரவால் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
துடிப்பான ஜனநாயகம் அமைய பத்திரிகை சுதந்திரம் அவசியம். இந்த அரசு எந்த நிலையிலும் பத்திரிகை சுதந்திரத்தை நிலை நிறுத்தும். சமூக ஊடகங்கள் வளர்ச்சி அடைந்து தற்போது மொபைல் மூலம் கூட செய்திகளை மக்கள் அறிந்து கொள்கின்றனர். பத்திரிகையாளர்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்” எனக் கூறி உள்ளார்.
“பிரதமர் மோடி பத்திரிகையாளர்களை சந்திப்பதைத் தவிர்க்கிறார் என்ற விமர்சனம் உண்டு. இதைப் போக்கும் வகையில் பத்திரிகையாளர்களை அவர் சந்திக்க வேண்டும்” என்ற கருத்து ஊடக மற்றும் சமூக ஆர்வர்களிடையே எழுந்துள்ளது