எல்லையில் ஊடுருவலைத் தடுக்க இந்தியா – மியான்மர் எல்லையில் வேலி அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
லடாக் மற்றும் வடகிழக்கு மாநில எல்லைகளில் வெளிநாட்டு சக்திகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதை அடுத்து இந்திய எல்லையைப் பாதுகாக்க மத்திய அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது : “இந்தியா – மியான்மர் எல்லையில் 1643 கி.மீ. நீளத்துக்கு வேலி அமைக்கப்படும். எல்லைகளை சிறப்பாக கண்காணிப்பதற்காக ரோந்துப் பாதையும் அமைக்கப்படும்.
நாட்டின் எல்லைகளை ஊடுருவ முடியாத வகையில் மாற்ற மோடி அரசு முனைப்பு காட்டி வரும் நிலையில் மணிப்பூரில் உள்ள மோரேயில் ஏற்கனவே 10 கி.மீ. நீளத்துக்கு வேலி அமைக்கப்பட்டுள்ளது. தவிர, மணிப்பூரில் சுமார் 20 கிலோமீட்டர் தூரத்துக்கு வேலி அமைக்கும் பணியும் அங்கீகரிக்கப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும்.
"The Modi government is committed to building impenetrable borders. It has decided to construct a fence along the entire 1643-kilometer-long Indo-Myanmar border…", says Union Home Minister Amit Shah. pic.twitter.com/rvxHK2MIsI
— ANI (@ANI) February 6, 2024
இது தவிர, ஹைபிரிட் கண்காணிப்பு அமைப்பு (Hybrid Surveillance System – HSS) மூலம் வேலி அமைக்கும் இரண்டு முன்னோடித் திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.