டில்லி

ழாவது பே கமிஷன் பரிந்துரைத்த குறைந்த பட்ச ஊதியத்துக்கு மோடி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஏழாவது பே கமிஷன் தனது ஊதிய உயர்வு மற்றும் குறைந்த பட்ச ஊதியம் ஆகியவைகள் குறித்த ஆய்வறிக்கையை மத்திய அரசுக்கு அளித்துள்ளது.  அந்த அறிக்கையின் பரிந்துரைப்படி  மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்க  மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.   அதன் படி மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக இருந்த ரூ. 18000 இனிமேல் ரூ.21000 ஆக மாற்றி அமைக்கப்படும்.  இதனால் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன் பெறுவார்கள்.

இந்த ஊதிய உயர்வு 2017ஆம் வருடம் ஜூலை ஒன்று முதல் அமுலாகும் எனவும் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு  தீபாவளி பரிசாக ஊதிய உயர்வின் அரியர்ஸ் கிடைக்கும் எனவும் தெரிய வந்துள்ளது.  இதன் மூலம் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும் எனக் கூறிய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அதை சமாளிக்கத் தேவையான ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது எனவும் தெரிவித்தார்.