மதுரை: நண்பர்களின் நலனுக்காக மோடி அரசு விவசாயிகளை அழிக்கிறது என்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி கூறினார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட டெல்லியில் இருந்து தனி விமானத்தில் மதுரை வந்த காங்கிரஸ் மக்களவை உறுப்பினரும், முன்னாள் தலைவருமான ராகுல்காந்தி மதுரையில் நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் கண்டுகளித்தார்.
பின்னர், மதுரை மக்களுடன் பொங்கல் விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டதுடன், அவர்களுடன் து மதிய உணவை உண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
மத்தியஅரசு புதிய வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளை புறக்கணிக்க மட்டும் செய்யவில்லை. அவர்களை அழிக்கவும் சதி செய்கிறது. இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது. மோடி, அவர்களின் நண்பர்களின் நலனுக்காக விவசாயிகளை அழிக்க சதி செய்கிறது. விவசாயிகளைச் சார்ந்திருக்கும் விசயத்தை, அரசின் ஒரு சில நண்பர்களைச் சார்ந்திருக்குமாறு மாற்ற நினைக்கிறது, மோடி அரசு விவசாயத்தையும், விவசாயிகளையும் புறக்கணிக்கிறார்கள் என்று கடுமையாக சாடினார்.
மேலும், விவசாயிகள் தான் இந்த நாட்டின் முதுகெலும்பு. அவர்களை யாராவது விவசாயிகளை நசுக்கி, வளம் பெறலாம் என எண்ணினால், அவர்கள் நமது வரலாற்றை பார்க்க வேண்டும். எப்போதெல்லாம் விவசாயிகள் பலவீனமானார்களோ அப்போதெல்லாம் நாடும் பலவீனமடைந்துள்ளது என்றார்.
இந்த நேரத்தில் மக்களிடம் நாள் ஒரு கேள்விகை முன்வைக்கிறேன்… சாதாரண விவசாயிகளை நசுக்கி, ஒரு சில வணிக அதிபர்களுக்காக உதவுகிறார்கள், ஆனால், கொரோனா தொற்று காலத்தில் சாதாரண மனிதனுக்கு உதவவில்லையே என்றவர், பிரதமர் மோடி, இந்திய நாட்டின் பிரதமரோ அல்லது தொழிலதிபர்களின் பிரதமரா?
விவசாயிகளுக்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன். அவர்களோடு தொடர்ச்சியாக நிற்பேன். மத்தியஅரசு இந்த சட்டங்களை திரும்பப்பெற அரசு கட்டாயப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.