மாடர்னா நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு அனுமதி கேட்டு இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் விண்ணப்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவைச் சேர்ந்த மாடர்னா நிறுவனத்தின் மருந்தை இந்திய சந்தையில் விற்பனை செய்ய சிப்லா நிறுவனம் முயற்சி செய்துவருகிறது.
இதற்கான அனுமதி ஓரிருநாட்களில் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், முதல்கட்டமாக 100 பேருக்கு பரிசோதனை செய்யவும் தயாராக உள்ளது.
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனங்களின் ஒப்புதல் உள்ளதால், இந்த தடுப்பூசியை ஆரம்ப கட்ட பரிசோதனை இல்லாமல் அவசர காலத்தில் பயன்படுத்த தேவயான அனுமதி வழங்க வேண்டும் என்று அந்த விண்ணப்பத்தில் கோரியிருப்பதாக தெரிகிறது.
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான அனுமதிக்காக காத்திருக்கும் இந்த தடுப்பூசி 90 சதவீத செயல்திறனை வெளிப்படுத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.