29/06/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டலம் வாரியாக விவரம்…

Must read

சென்னை: தமிழகத்தில் மேலும் 4,804 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 24,70,678 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 291 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த பாதிப்பு 24,70,678 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பும 32,388 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை  23,97,336 பேர் தொற்று பாதிப்பில இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்று பாதிப்பில் கோவை முதலிடத்தில் உள்ளது. அங்கு 597 பேர் இன்று பாதிக்கப்பட்ட நிலையில், 2வது இடத்தில் 506 பேர் பாதிப்புடன் ஈரோடும், 3வது இடத்தில் 318 பேர் பாதிப்புடன் சேலமும், 294 பேர் பாதிப்புடன் திருப்பூர் 4வது இடத்திலும், 291 பேர் பாதிப்புடன் சென்னை 5வது இடத்திலும் உள்ளது.

சென்னையில் நேற்று மட்டும் புதியதாக 291 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டதால்,  இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 5,32,006 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று  ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி 4 பேர் மட்டுமே உயரிழந்துள்ளனர். இதுவரை பலியானோர் மொத்த எண்ணிக்கை 8165 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில்  363 பேர் தொற்றின் பாதிப்பில் இருந்து குணமடைந்த நிலையில், இதுவரை 52,03,79 பேர் குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலையில்,3462 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

28.06.2021 நிலவரப்படி, சென்னையில் மொத்தம் 25,36,383 பேருக்கும், 28.06.2021 அன்று 10,478 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மண்டலம் வாரியாக பாதிப்பு விவரம்:

More articles

Latest article