சென்னை
தமிழக தென் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஜனவரி 14 வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ”தென் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில், இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மேலும் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள உள் மாவட்டங்களில், நாளை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
வரும் 13 ஆம் தேதி அன்று கடலோர மாவட்டங்கள், அதையொட்டிய மாவட்டங்களில் மற்றும் 14 ஆம் தேதி அன்று தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில், மிதமான மழை பெய்யும். பிற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.
நேற்றைய காலை நிலவரப்படி, தென்காசி மாவட்டம் சிவகிரியில், 1 செ.மீ., மழைப் பதிவானது.
தமிழகத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. ஆகவே அந்த பகுதியில் மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்”.என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது