
சென்னை:
வட மற்றும் தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் மழை பெய்யும் என தெரிகிறது.
சென்னையில் இன்று காலை முதல் மேகமூட்டத்துடன் அவ்வப்போது மிதமான மழை பெய்து வருகிறது.
சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய, வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், மத்திய மேற்கு வங்கக் கடலில் ஆந்திர கடற்பகுதியில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வட தமிழகத்தின் கடற்கரை பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அடுத்து வரும் 24 மணி நேரத்தில் வட தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யும்.
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது மழை பெய்யும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பூரில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel