சென்னை
சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம் என தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
”தற்போது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் இன்று தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதாவது நாகப்பட்டினம்,, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது”
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது .