சென்னை

ன்று சென்னையின் பல பகுதிகளில் அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி நேற்று முதல் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மழை பெய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.  அதன்படி நேற்று காலை முதல் சென்னையில் மழை பெய்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை முதல் சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. 

அதாவது சென்னையில் அடையாறு, கிண்டி, மயிலாப்பூர், ஈக்காட்டு தங்கல், தியாகராய நகர், அம்பத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.