Exif_JPEG_420

சென்னை

சென்னை செண்டிரல் ரெயில் நிலையத்தில் மொபைல் திருடன் ஒருவன் ரெயில்வே காவலரை அரிவாளால் வெட்டி உள்ளான்.

இன்று சென்னை செண்டிரல் புறநகர் ரெயில் நிலையத்தில் மினா என்னும் ரெயில்வே காவலர் பணியில் இருந்தார்.  சுமார் 4 மணி அளவில் ரெயில் பயணி ஒருவரின் மொபைலை பிடுங்கிக் கொண்டு மூவர் ஓட்டம் பிடித்தனர்.    அதைக் கண்ட ரெயில்வே காவலர் அந்த திருடர்களை பிடிக்க பின் தொடர்ந்துள்ளார்.

அந்த திருடர்களில் ஒருவன் திடீரென தான் வைத்திருந்த அரிவாளால் அவர் தலையை வெட்டி உள்ளான்.   அவர் தலையில் காயத்துடன் அவனைப் பிடித்துள்ளார். மற்ற இருவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.   அந்த திருடனை காவலர் பெரியமேடு காவல் நிலையத்தில் மினா ஒப்படைத்துள்ளார்

தலையில் வெட்டு பட்ட காவலர் மினாவுக்கு சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.   தப்பி ஓடிய இரு மொபைல் திருடர்களையும் பெரியமேடு காவல் நிலைய காவலர்கள் தேடி வருகின்றனர்.   கைது செய்யப்பட்ட திருடனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.