புவனேஸ்வர்

பூரி ஜகன்னாதர் கோவிலில் வரும் ஜனவரி 1 முதல் மொபைல் போனுக்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

ஒடிசா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஜகன்னாதர் கோவிலில் சுற்றுலா பயணிகள் மொபைல் போன் மூலம்  புகைப்படம் எடுத்து வருகின்றனர்.     இது குறித்து பல பக்தர்கள் கோவில் நிர்வாகத்துக்கு புகார் அளித்துள்ளனர்.    இது கோவில் விதிகளுக்கு முரணானது என தெரிவிக்கப் பட்டுள்ளது.

தற்போது பூரி ஜகன்னாதர் கோவிலில் பக்தர்கள் மொபைல் எடுத்து வரக் கூடாது என தடை விதிக்கப்பட்டுளது.    கோவில் நிர்வாகம் இது குறித்து, “வரும் ஜனவரி 1 முதல்  பக்தர்கள் கோயிலுக்கு மொபைல் போன் எடுத்து வர  தடை விதிக்கப் பட்டுள்ளது.   தடையை மீறும் பக்தர்களிடம் இருந்து போன் பறிமுதல் செய்யப்பட்டு அபராதமும் விதிக்கப் படும்.    இந்த சோதனையில் போலீசாரும் கோயில் காவலர்களும் ஈடுபடுத்தப் படுவார்கள்”  என அறிவித்துள்ளது.