சென்னை
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய பத்மப்ரியா திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து விலகி வருகின்றனர். அக்கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் கட்சியில் இருந்து விலகி இன்று திமுகவில் இணைந்தார்.
சுற்றுச் சூழல் ஆர்வலராக இருந்து பிறகு மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த பத்மப்ரியா மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்டார். அவரும் மற்ற ம நீ ம நிர்வாகிகளைப் போல் தோல்வி அடைந்தார். தோல்விக்குப் பிறகு பத்மப்ரியா மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகினார்,
அதன் பிறகு பத்மப்ரியா எந்த கட்சியிலும் இணையாமல் இருந்தார். தற்போது பத்மப்ரியா திமுக தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில் திமுக வில் இணைந்துள்ளார். ஏற்கனவே அக்கட்சியின் முன்னாள் தலைவர் மகேந்திரன் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து பத்மப்ரியாவும் திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.