கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அறையில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கன்னியாகுமரியில் ஒகி புயலால் இறந்த மீனவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
பாதித்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன் சிங் சவான் அறையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ் ராஜன், மனோ தங்கராஜ், ஆஸ்டின் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ் என 5 பேர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel