சென்னை:
அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்.
அதிமுக பாஜக கூட்டணி ஏற்பட்டதை தொடர்ந்து, அதிமுக கூட்டணி கட்சியான மனிதநேய ஜனநாயக கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது. கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, நாகப்பட்டினம் தொகுதியில் அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மனிதநேய ஜனநாயக கட்சி சட்டமன்ற உறுப்பினர் தமிமும் அன்சாரி அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்போது, அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிமும் அன்சாரி, அ காங்கிரஸ் தலைமையால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும் என்று கூறியிருந்தார்.
தமிழகத்தின் எந்தவொரு பிரச்சனைக்கும் பாரதிய ஜனதா அரசு தீர்வு காணவில்லை குறைந்த பட்ச உத்திரவாதம் கூட கொடுக்காத பிஜேபியுடன் கூட்டணி சேருவது என்பது தற்கொலைக்கு சமம் என்று குற்றம் சாட்டி வந்தவர் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து, திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்து உள்ளார். உடன் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர்களும் ஸ்டாலினை சந்தித்தனர்.