நடிகையின் நிர்வாண படத்தை வெளியிட்ட எம்எல்ஏ மகன்!

Must read

 

மும்பை,

டிகையின் நிர்வாண படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார் சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ மகன்.

தனது தந்தையை டுவிட்டரில்வ விமர்சித்ததை தொடர்ந்து எம்எல்ஏவின் மகன் அந்த நடிகையின் நிர்வாண படத்தை வெளியிட்டு அசிங்கப்படுத்தி உள்ளார்.

சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ.வை விமர்சித்து ட்வீட்டிய பாலிவுட் நடிகை இஷா குப்தாவை எம்.எல்.ஏ.வின் மகன் அசிங்கப்படுத்தியுள்ளார்.

பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பல பெண்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளாகினர். இது குறித்து அறிந்த சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ.வும், அக்கட்சியின் மகாராஷ்டிரா மாநில தலைவருமான அபு அஸ்மி, சர்க்கரை இருக்கும் இடத்தை நோக்கி எறும்பு வரத்தான் செய்யும் என்று விமர்சித்திருந்தார்.

அவரது கருத்தை கேட்ட, பாலிவுட் நடிகை இஷா குப்தா,

அபு அஸ்மி உங்களை போன்ற முட்டாளை பெற்றெடுத்த பெண்ணை தான் குறை கூற வேண்டும். அதை நினைத்து அவரே நொந்திருப்பார் என  டுவிட் செய்திருந்தார்.

இதை பார்த்த,  அபு அஸ்மியின் மகனும், நடிகை ஆயிஷா தாக்கியாவின் கணவருமான ஃபர்ஹான் கூறியிருப்பதாவது,

இஷா அபு அஸ்மியை பெற்றெடுத்தது என் பாட்டி. அவர் உயிருடன் இல்லை. அவர் உங்களை விட பல மடங்கு கண்ணியமானவர் என பதிலுக்கு டுவிட்டியுள்ளார்..

அபு அஸ்மி பற்றி பேசிய இஷா பற்றி சமாஜ்வாடி கட்சி நிர்வாகி அமித் பிரகாஷ் சிங் டுவிட்டரில் கூறியிருப்பதாவது,

இஷா முதலில் உங்களின் இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு அபு அஸ்மி பற்றி பேச உங்களுக்கு தகுதி உள்ளதா என்று கூறுங்கள். வெட்கக்கேடு என தெரிவித்துள்ளார்.

படங்களில் உடலை காட்டி ஆபாசமாக நடிப்பது அதன்பிறகு பெரிய இது போன்று பெண்கள் முன்னேற்றத்தின் பிராண்ட் அம்பாசிடர் போன்று காண்பித்துக் கொள்வது என்று இஷாவை ஒருவர் டுவிட்டரில் கடுமையாக சாடியுள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் காரசாரமாக விவாதம் நடைபெற்றுவருகிறது.

More articles

Latest article