சேலம்:
நாளை மெஜாரிட்டையை நிரூபிப்பதாக அறிவித்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, அவரது சொந்த மாவட்டத்திலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு தமிழகம் முழுவதுமே எதிர்ப்பு நிலவி வரும் சூழலில், அவர் சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றுள்ளார்.

ஆனால் அவரது சொந்த தொகுதியான எடப்பாடியிலேயே அவருக்கு கடும் எதிர்ப்பு தோன்றியிருக்கிறது. கட்சி நிர்வாகிகளில் இருந்து அடிமட்ட தொண்டர்கள் வரை அனைவரும் சசிகலா மற்றும் எடப்பாடிக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், இன்று சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ வெங்கடாச்சலம் அலுவலகத்தின் முன், அ.தி.மு.க. வினர் பெருந்திரளாகக் கூடி, எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சசிகலாவிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

முதல்வர் பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு சொந்த மாவட்டத்திலே எதிர்ப்பு கிளம்பியுள்ளது, சசிகலா குடும்பத்தினரையும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது