86fc34b5-c87b-4498-9905-efae9cf0e5c0
இளைஞரோடு கருணாஸ் சிரிப்புடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி குறித்து கருணாஸ் கூறியதாவது :-
“நேற்று ராஜாஜி ஹாலிலிருந்து அண்ணா சாலை வழியா எம்.ஜி.ஆர் சமாதிக்கு போய்கிட்டு இருந்த வழியிலே கிட்டத்தட்ட 100 பேருக்கும் மேலானோர் கேவலமாக என்னிடம் வந்து செல்ஃபி எடுக்கணும்-ன்னு கேட்டார்கள். அப்போ நான் அவங்ககிட்ட, ‘ஏம்ப்பா, படம் புடிக்கிறதுக்கான இடமா இது..? உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா..?’னு கேட்டேன். அப்படி நான் கேட்டும், அதையும் மீறி என்னோடு போட்டோ எடுக்கணும்னு சில பேர் ஃபாலோ பண்ணி வந்தாங்க. அப்படி வந்த ஒரு பையன் தான், ‘அண்ணே, நான் ஊர்ல இருந்து வந்துருக்கேன். ஊருக்கு போயிட்டேன்னா அப்புறம் பார்க்கமுடியாது, ஒரே ஒரு போட்டோ எடுத்துகலாம்’னு கேட்டதனால தான் அந்த போட்டோவுக்கு போஸ் கொடுத்தேன். அது தெரியாம சமூக வலைதளங்களில் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்..
இப்ப இறுதிச்சடங்கு நடக்கும்போது கருணாஸ் எப்படி போட்டோவுக்கு போஸ் கொடுக்கலாம்னு கேட்கிறாங்க. என்னையும் என் விசுவாசத்தையும் விமர்சனம் பண்றவங்களுக்காக நான் ஒரு விஷயத்தை சொல்கின்றேன் . நேத்து அம்மாவை நல்லடக்கம் செஞ்ச எடத்தில் நெடுங்கட்டையா வுழுந்து சாமி கூம்பிட்டுட்டு, அங்கிருந்த மண்ணிலே ஒரு கைப்பிடி எடுத்து வந்து என் வீட்டில் வைச்சிருக்கிறேன். அந்த அளவுக்கு உண்மையானவன் நான், அம்மாவிற்கு எப்போதும் உண்மையானவனாக தான் இருப்பேன்.
ஆனால் எனக்கு எப்போதும் எதிரிகள் அதிகம். இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயத்தில் என்னை விமர்சித்தால் அவர்களுக்கு இன்பம் கிடைக்கிறது. இந்த விஷயத்தை பொறுத்தவரை இது தான் என் விளக்கம்” என்று கூறியுள்ளாராம் கருணாஸ்.