சென்னை: மத்தியஅரசு நிதி தரவில்லை என கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உள்பட பல பகுதிகளில், பொதுமக்கள் மற்றும் பேருந்துகளில் திமுகவினர் அல்வா கொடுத்து நூதனை முறையில் மத்திய அரசை குற்றம் சாட்டி உள்ளனர்.
மத்தியஅரசு தமிழ்நாட்டுக்கு உரிய நிதியை முறையாக தரவில்லை என குற்றம் சாட்டியும், நிதியை வழங்கும்படி, திமுக எம்.பி.க்கள் இன்று டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் கருப்பு சட்டை அணிந்து போராடி வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில், சென்னை, நெல்லை உள்பட பல பகுதிகளில், திமுகவினர் பொதுமக்களுக்கு அல்வாக கொடுத்து நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சென்னை, திருநெல்வேலி போன்ற இடங்களில் திமுகவினர் மக்களுக்கு அல்வா விநியோகம் செய்கின்றனர், மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு உரிய நிதி கிடைக்கவில்லை என்பதைக் குறிக்கும் வகையில் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் அல்வா பாக்கெட்டுகளின் மேல், மாநில உரிமை, ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்கிய நிதி ஜீரோ என குறிப்பிடப்பட்டு உள்ளது.