சென்னை,

டுத்த மாதம் (நவம்பர்) 7ந்தேதி தமிழகம் முழுவதும் ஸ்டாலின் எழுச்சி பயணம் மேற்கொள்ள இருக்கிறார். நேற்று நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

இந்த எழுச்சி பயணம் சென்னையில் இருந்து தொடங்க இருக்கிறது. இதை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடங்கி வைக்கிறார். பயணத்தின் இறுதி நிகழ்ச்சியின்போது அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.

கடந்த  2016 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, தமிழகம் முழுவதும் ‘நமக்கு நாமே’ என்ற பெயரில் சுற்றுப்பயணம் செய்தி பொதுமக்கள் மற்றும் திமுகவினரிடைய பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்தார். அந்த நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில், தற்போது   ‘எழுச்சிப் பயணம்’ என பெயரில் தனது சுற்றுப்பயணத்தை  ஸ்டாலின் தொடங்க இருக்கிறார்.

இந்த எழுச்சிப்பயணம் சென்னையில் இருந்து நவம்பர் 7-ம் தேதி தொடங்குகிறது. இதில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டு ஸ்டாலினின் எழுச்சிப் பயணத்தை தொடங்கி வைக்கிறார்.

மத்தியஅரசுக்கு எதிரான நிலையில் தீவிரமாக இருப்பவர் மம்தா பானர்ஜி. அதே வழியில் திமுகவும் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக திமுகவின் அழைப்பை ஏற்று மம்தா இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

நவம்பர் 7-ம் தேதி தொடங்கும் ஸ்டாலினின் எழுச்சி பயணம், அதையடுத்து கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பிரசாரப் பயணம் மேற்கொள்ளும் அடுத்ததாக மதுரை மாவட்டங்களில் 3 நாட்கள் பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தை 5 மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்திலும் 3 நாட்கள் வீதமாக எழுச்சி பயணம் மேற்கொள்ளும் வகையில் அவரது சுற்றுப்பயணம் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும், இறுதியாக வரும் டிசம்பர் மாதம் பயணத்தின் இறுதி நிக்ழச்சி நிறைவு பெறும் என்றும் கூறப்படுகிறது.

இறுதி நிகழ்ச்சியின்போது, அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி கலந்துகொள்வார் என்றும் கூறப்படுகிறது.