சென்னை: தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 இடங்களே தேவைப்படும் நிலையில், திமுக தனியாக 118 இடங்களை பெற்று முன்னிலை வகித்து வருகிறது. கூட்டணி கட்சிகளைச் சேர்த்து 142 இடங்களை பிடித்துள்ளது. இதனால் திமுக ஆட்சி அமைப்பபது உறுதியாகி உள்ளது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலில் 227 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 134 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எதிர்கட்சியான திமுக 173 இடங்களில் போட்டியிட்டு 89 இடங்களில் வெற்றி பெற்றது. திமுகவுடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் 41 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களில் வெற்றி பெற்றது.
இந்த தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணியில் திமுக 173 இடங்களில் தனித்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்களும், சி.பி.ஐ–க்கு 6 இடங்களும், சி.பி.எம். கட்சிக்கு 6 இடங்களும், வி.சி.க,, மதிமுக கட்சிகளுக்கு தலா 6 இடங்களும், கொ.ம.தே.க. – 3, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 3, மனித நேய மக்கள் கட்சி – 2, ஃபார்வர்ட் ப்ளாக் – 1, தமிழக வாழ்வுரிமை கட்சி 1, மக்கள் விடுதலை கட்சி 1, ஆதித்தமிழர் பேரவை-1 இடமும் வழங்கப்பட்டுள்ளது.
மதியம் 12.30 மணி நிலவரப்படி, வாக்கு எண்ணிக்கையில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. தற்போதைய நிலையில் 118 இடங்களில் திமுக முன்னணியில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 13 இடத்திலும், கம்யூனிஸ்டு கட்சிகள் தலா 2 இடங்களிலும், விசிக 3 இடங்களையிலும், மதிமுக 3 இடங்களிலும் மற்றவை 2 இடங்களையும் பிடித்துள்ளன.
‘திமுக கூட்டணி 142 இடங்களில் முன்னணியில் இருந்து வருகிறது. இதனால், திமுகவின் வெற்றி உறுதியாகி உள்ளது. முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்பது உறுதியாகி உள்ளது.