சென்னை: தமிழகத்துக்கு இப்போது தேவை சொல் அல்ல; செயல் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் 2 மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மத்திய, மாநில அரசுகள் தற்போது பல்வேறு தளர்வுகளை வழங்கி வருகின்றன. ஆனால் தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளோவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஒரு வாரமாக நாள்தோறும் நோய்த்தொற்று கண்டறியப்படுவோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. சென்னையிலும் உச்சக்கட்ட பாதிப்பு காணப்படுகிறது.
இந் நிலையில் தமிழகத்துக்கு இப்போது தேவை சொல் அல்ல; செயல் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டரில் கூறி இருப்பதாவது:
வெறும் வாய்ச்சவடால், ஏதோ புள்ளிவிவரங்கள் என முதல்வர் ஏமாற்றாமல், குடும்பத்திற்கு ரூ.5000 வழங்கி, சென்னையின் 5 மண்டலங்களை கடும் கட்டுப்பாட்டுப் பகுதியாக மாற்றி-தேவையானவற்றை அரசே வழங்கி- அரண் எழுப்பித் தடுத்தால்தான் மக்களைக் காக்க முடியும் என்று கூறி உள்ளார்.