ஸ்டாலின் தமிழ் பெயரா? : மு க ஸ்டாலின் பதில்

Must read

சென்னை

மு க ஸ்டாலின் தனது பெயர் தமிழ்ப்பெயர் அல்ல காரணப் பெயர் என கூறி உள்ளார்.

சமீபத்தில் சென்னையில் ஒரு கூட்டத்தில் பேசிய திமுக வின் செயல் தலைவரும் தலைவர் கருணாநிதியின் மகனுமான மு க ஸ்டாலின் மக்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் எனக் கூறினார்.   அதையொட்டி மக்கள் பலரும் ஸ்டாலின் என்பது தமிழ்ப் பெயர் இல்லை என்னும் போது மற்றவர்களை இவர் எப்படி தமிழில் பெயர் வைக்கச் சொல்லலாம் எனக் கேள்விகள் எழுப்பினார்கள்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக மு. க.  ஸ்டாலின்,  “ஸ்டாலின் என்பது தமிழ்ப்பெயர் இல்லை.   ஆனால் அதற்கு ஒரு காரணம் உள்ளது.   திமுக தலைவர் கருணாநிதி எனக்கு ஐயாத்துரை என பெயர் வைக்க எண்ணி இருந்தார்.  பெரியார் மற்றும் அண்ணாத்துரை ஆகிய இருவருடைய பெயரையும் இணைத்து இவ்வாறு ஒரு பெயரை அவர் தேர்ந்தெடுத்திருந்தார்.

ஆனால் அவர் சென்னையில் நடந்த சோவியத் யூனியனின் புரட்சித் தலைவர் ஸ்டாலின் நினைவுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டிருந்த போது நான் பிறந்த செய்தி அவருக்கு வந்தது.   அதனால் அந்த மேடையிலேயே அவர் தனது மகனின் பெயர் (அதாவது எனது) ஸ்டாலின் என அறிவித்தார்.   அதே நேரத்தில் நான் எனது குழந்தைகளுக்கு தமிழில் தான் பெயர் சூட்டி உள்ளேன்”  எனக் கூறி உள்ளார்.

More articles

Latest article