நாங்குனேரி:

நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்து வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும், பாடத்தை புகட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை வெற்றிபெறச் செய்யுங்கள் என்று பிரசாரம் மேற்கொண்டார்.

தமிழகத்தில், விக்கிரவாண்டி நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. விக்கிரவாண்டியில் அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி நேரடியாக மோதும் நிலையில், நாங்குனேரி தொகுதியில், திமுக கூட்டணி சார்பில் காங்ரிஸ் கட்சியும், அதிமுகவும் நேரடியாக மோதுகின்றன.

நாங்குனேரியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பல கிராமங்களுக்குச் சென்று, அங்குள்ள திண்ணையில் அமர்ந்து அப்பகுதி மக்களை சந்தித்து பேசி ஆதரவு கோரி வரும் ஸ்டாலின், திமுக ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ப்பட்ட மக்கள் நலப் பணிகளை விளக்கி ஓட்டு கேட்டார். அதிமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.

அதிமுக அரசு  ஆட்சியை காப்பாற்ற, கோடி கோடியாக பணம் கொடுத்து தனத சட்டமன்ற உறுப்பினர்களை  பிடித்து வைத்துக்கொண்டுள்ளதாக குற்றம் சாட்டியவர், அவர்களுக்கு பணம் கொடுக்க ஊழல் செய்து கொள்ளை அடித்து வருவதாகவும் , தமிழகத்தில்  நடைபெறும் ஆட்சி, விவசாயம், பெண்கள் மேம்பாடு, நாட்டு மக்கள் குறித்து கவலைப்படாத ஆட்சி என்று கூறியவர், மத்திய மாநில அரசுகளுக்கு பாடம் புகட்ட, காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு வெற்றியைத் தாருங்கள் என்று பேசினார்.