சென்னை:

மிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக மாவட்டச் செயலாளர்களுடன் வீடியோ கால் மூலம் உரையாடி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் படியும் கோரிக்கை விடுத்தார்.

திமுக மாவட்டச் செயலாளர்களுடன் வீடியோ கால் மூலம் உரையாறும் ஸ்டாலின்

தமிழகத்தில் கொரோனா தொற்று  பாதித்தவர்கள் எண்ணிக்கை 67ஆக உயர்ந்துள்ளது. இதுவரை  5 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா அறிகுறியுடன் 1,925 பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

திமுக தரப்பில், பாதிக்கப்பட்டு மக்களுக்கும் உணவுப் பொருட்கள் உள்பட தேவையான  உதவிகள் மாநிலம் முழுவரும் கட்சியினரால் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், திமுக மாவட்டச் செயலாளர்களுடன், மு.க.ஸ்டாலின் வீடியோகால் மூலம் பேசி, மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அறிவுறுத்தினார்.

இதுகுறித்து கூறியுள்ள ஸ்டாலின்,  கொரோனா காலத்திலும் தொய்வில்லாது தொண்டாற்றுவோம்! மக்கள் செயலாளர்களாக செயல்பட மாவட்டச் செயலாளர்களுக்கு ஆலோசனை கூறினேன்!

கொரோனா காலத்தில் திமுக சட்டமன்ற/ நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களின் குடும்ப உறுப்பினர்களாக உதவிகள் செய்ய வேண்டுகோள் விடுத்தேன் என்று கூறி உள்ளார்.