சென்னை:

ஷார்ஜாவில் இன்று நவம்பர் 3-ந் தேதி நடைபெறும் சர்வதேச புத்தக கண்காட்சியில் அரசு சிறப்பு விருந்தினராக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க புறப்பட்டுச் சென்றார்.

ஐக்கிய அரபு அமீரகங்கள், ஷார்ஜா அரசாங்கம் தொடர்ந்து 36 ஆண்டுகளாக மிகப்பெரும் புத்தகக் கண்காட்சியை நடத்தி வருகின்றன. உலகம் முழுவதிலும் இருந்து அரசியல் தலைவர்கள் மற்றும் அனைத்து மொழிகளைச் சார்ந்த படைப்பாளிகள் விருந்தினர்களாக கலந்துகொள்கிறார்கள். இன்று மாலை நிகழ்ச்சி துவங்குகிறது.

 

இந்த ஆண்டு கண்காட்சிக்கு தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலினை சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.

இதை ஏற்று மு.க.ஸ்டாலின் கிளம்பிச்சென்றார். அவருக்கு அமீரகத்தில் வாழும் அனைத்து தமிழர் அமைப்புகள் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளன.  இதற்கான ஒருங்கிணைப்பை அரிகேசவநல்லூர் எஸ்.எஸ்.மீரான் செய்திருக்கிறார்.