டில்லி:

விண்வெளிக்கு ஆட்களை அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்திற்கு இந்திய விமானப்படை வீரர்கள் பலர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கான உடற்பரிசோதனை உள்பட முதல்கட்ட சோதனைகளை நிறைவேறி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

விண்வெளிக்கு அமெரிக்ககா, ரஷ்யா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் மனிதர்களை அனுப்பி ஆராய்ச்சிகள் நடத்தி வருகிறது. இந்த ஆராய்சியில் இந்தியாவும் பங்குபெற முனைப்பு காட்டி வருகிறது.

இந்த திட்டத்திற்கு இஸ்ரோ ககன்யான் திட்டம் என்று பெயர் வைத்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 3 பேரை விண்ணுக்கு அனுப்ப மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி விண்ணுக்கு  பயணம் ஆகும் அவர்கள் அங்கு 7 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்வார்கள் என்று கூறப்படுகிறத.

இதற்கான வீரர்கள் தேர்வு பணி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுக்கு இந்தியா விமானப்படையைச் சேர்ந்தவர்கள் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும், இவர்களில் 3 பேர் இறுதியாக தேர்வு செய்யப்பட்டு விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டு உள்ளது.

தற்போது தேர்வாகி உள்ள வீரர்களுக்கு  பெங்களூரில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் ஏரோஸ்பேஸ் மெடிசின் அமைப்பில் இந்த சோதனை நடந்து வருகிறது. முதல் கட்ட சோதனை முடிவடைந்து உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ரஷ்யாவில் லியாசான் பயிற்சி மையத்தில் பயிற்சி வழங்கப்படம். அதன்பின் இவர்கள் விண்ணுக்கு அனுப்பப்படுவார்கள்.