‘மிஷன் சக்தி’ மாபெரும் வெற்றி: விண்வெளித்துறையில் இந்தியா வியத்தகு சாதனை….! பிரதமர் மோடி பெருமிதம் 

Must read

டெல்லி:

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி, இன்று திடீரென நாட்டு மக்களிடையே உரையாற்றினார். இது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பிரதமர் முன்னதாக மோடி, தனது பெர்சனல் டிவிட்டர் பக்கத்தில் இன்று முற்பகல் 11.45 மணிக்கு உரையாற்ற இருப்பதாக அறிவித்து இருந்தார்.

முன்னதாக பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை பாதுகாப்பு தொடர்பாக முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து மதியம் சுமார் 12.25  மணி அளவில் மோடி நேரடியாக மக்களிடையே உரையாற்றினார். அவரது  உரை டி.வி., ரேடியோ மற்றும்  சமூக வலைத்தளங்கள் மூலம் நாட்டு மக்களிடம்  உரையாற்றினார்.

மோடியின் உரை,

விண்வெளித் துறையில் இந்தியா மிகப்பெரிய சாதனையை இன்று நிகழ்த்தியுள்ளது என்று கூறியவர், அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தப்படியாக இந்தியா விண்வெளித்துறையில் சாதனை படைத்துள்ளது என்று பெருமிதமாக கூறினார்.

செயற்கைகோள் ஏவுகணை ஏ-சாட்டை இந்தியா சோதித்துள்ளதாக கூறிய  பிரதமர்  அமெரிக்கா மற்றும் சீனா மட்டுமே இந்த ஏவுகணைகளை கைவசம் வைத்துள்ளன என்பதையும் தெரிவித்தார்.

நமது நாட்டின் செயற்கைக்கோளை அழிக்கும் முயற்சியை தடுக்கும் ‘மிஷன் சக்தி’சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்றும், விண்வெளியில் செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் சோதனை 3 நிமிடங்களிலேயே வெற்றி அடைந்தது என்றும் தெரிவித்தார்.

‘மிஷன் சக்தி’ சோதனை இந்தியாவின் செயற்கைக்கோளை பாதுகாக்கும் முயற்சிதானே தவிர, பிற நாடுகளுக்கு எதிரான சோதனை அல்ல என்றும் தெளிவு படுத்தினார்.

இவ்வாறு அவர் கூறினார்.

More articles

Latest article