சென்னை:
டந்த மாதம் ஜூலை 22ந்தேதி சென்னையை அடுத்த தாம்பரம் விமானப்படை தளத்திலிருநது அந்தமான் சென்ற ஏ.என்.-32 ரக விமானம் 29 பேர்களுடன் மாயமானது. அந்த விமானம் என்ன ஆனது, அதில் பயணம் செய்வர்களின் நிலை என்ன என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

கருப்பு பெட்டி
கருப்பு பெட்டி

ஏற்கனவே இந்த விமானம் பலமுறை பழுது பார்க்கப்பட்டு இருந்ததாகவும், பறப்பதற்கு தகுதியற்றது என்றும் பல்வேவறு விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் வேளையில், தற்போது அதில் கருப்பு பெட்டியே இல்லையாம் என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
பொதுவாக அனைத்து விமானங்களிலும் கருப்பு பெட்டி இருப்பது கட்டாயம்.  விமானத்தில் நடைபெறும் அனைத்து வகையான சமிக்ஞைகளையும் தனக்குள்ளே பதிவு செய்தும் திறன் உள்ளது கருப்பு பெட்டி எனப்படும் எலக்ட்ரானிக் பொருள். இது எளிதில் சேதமடையாது. விமானம் தண்ணீருக்குள் விழுந்தால் 30 நாட்கள் தொடர்ந்து ஒலி எழுப்பிக்கொண்டே இருக்கும். இதிலிருந்து வெளியாகும் சிக்னல் 20 ஆயிரம் அடி தூரம் வரை கேட்கும்.
இந்த கருப்பு பெட்டியின் மூலம் விமான விபத்துக்கான காரணங்களை அறிந்து கொள்ள முடியும். ஆனால் தற்போது மாயமான இந்திய விமானத்தில் கருப்பு பெட்டியே இல்லை என்பது வேதனையானது.
மாயமான இந்திய விமானம் பற்றி எந்தவிதமான  தகவலோ, விமானத்தின் உடைந்த பாகங்களோ இற்று வரை கிடைக்கவில்லை. விமானத்தின் கருப்பு பெட்டி என்ன ஆனது என்று பலரும் கேட்கும் வேளையில், அந்த விமானத்தில் கருப்பு பெட்டியே பொருத்தப்படவில்லை என்றும், அது இருந்திருந்தால் விமானம் விபத்தில் சிக்கி கடலில் விழுந்திருந்தால், கடலுக்கு அடியிலிருந்து சிக்னல் கிடைத்திருக்கும், அதன் காரணமாக விமானத்தை எளிதில் கண்டுபிடித்திருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் விமானப்படை தளத்திலிருந்து தெரியவந்துள்ளது.
மாயமான விமானம் (மாதிரி)
மாயமான விமானம் (மாதிரி)

மாயமான அந்த விமானத்தில் இருப்பிடத்தை காட்டும் தற்காலிக கருவியான, ‘எமர்ஜென்சி லொகேஷன் டிரான்ஸ்மீட்டர்’  என்ற கருவி மட்டுமே பொருத்தப் பட்டிருந்தது என்றும், இது மூன்று நாட்கள் மட்டுமே செயல்படும் தன்மை உடையது என்று தெரிகிறது. இந்த கருவி வேலை செய்திருந்தால், இதிலிருந்நது சிக்னல் கிடைத்திருக்கும். ஆனால்  அதிலிருந்தும் சிக்னல் வரவில்லை என தெரிகிறது.
மொத்ததில் பறப்பதற்கு லாயக்கற்ற ஒரு விமானத்தை இயங்கி 29 விமானப்படை வீரர்கள் பலி வாங்கிவிட்டது இந்திய விமானப்பபடை என்பதே ஊர்ஜிதமாகிறது.
இதுகுறித்து,  கடலோர காவல் படை அதிகாரியிடம் கேட்ட போது, ‘விமானம் மாயமாகி, 10 நாட்களுக்கு மேல் ஆகியிருந்தாலும் தேடுதல் பணியின் வேகம் குறையவில்லை, தேடிகொண்டே இருக்கிறோம்” என்றார்.