நியூயார்க்: அமெரிக்காவில் நேற்று முன்தினம் இரவு நடந்த, 2022 ம் ஆண்டுக்கான, ‘மிஸ் யுனிவர்ஸ்’ எனப்படும், பிரபஞ்ச அழகி போட்டியில் அமெரிக்க அழகியான ஆர் போனி கேப்ரியல் முதலிடம் பிடித்தார். அவருக்கு கடந்தாண்டு பிரபஞ்ச அழகியான இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் கவுர் சாந்து, கிரீடம் அணிவித்து பட்டத்தை அளித்தார்.

2022ம் ஆண்டுக்கான  பிரபஞ்ச அழகி போட்டியின் இறுதிப்போட்டி அமெரிக்காவின் லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில்  14ந்தேதி நடெபற்றது. இது 71வது பிரபஞ்ச அழகி போட்டியாகும். இந்தப் போட்டியில் மொத்தம் 86-க்கும் மேற்பட்ட பெண்கள் போட்டியிட்டனர். அமெரிக்க அழகியான ஆர் போனி கேப்ரியல் முதலிடம் பிடித்தார். 2வது இடத்தை வெனிசுலாவின் டயானா சில்வாவும், டொமினிகன் குடியரசின் அமி பெனா 3வது இடத்தையும் பிடித்தனர்.

இந்தப் போட்டியில் இந்தியா சார்பாக போட்டியிட்ட திவிதா ‘சோன் சிரியா’ உடையணிந்து வந்து உலகத்தின் கவனத்தை ஈர்த்ததுடன், அவர் 16 ஆவது இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.