[embedyt] https://www.youtube.com/watch?v=xEMerkWmfi0[/embedyt]
நடிகை கீர்த்தி சுரேஷின் நடிப்பில் உருவாகும் மிஸ் இந்தியா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
தெலுங்கில் இவர் நடித்த மகாநடி படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது. சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெறுகிறார் கீர்த்தி சுரேஷ்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகவுள்ள மிஸ்இந்தியா படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியிருக்கிறது. மிஸ் இந்தியா படம் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்ட படம் ஆகும். தெலுங்கில் உருவாகும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் நரேந்திரா நாத் இயக்குகிறார். இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார்.
இந்த படத்துக்காக கீர்த்தி சுரேஷ் 15 கிலோ எடையை குறைத்துள்ளார் என்று தகவல் தெரிவிக்கின்றது. மிஸ் இந்தியா படத்தில், ஜகபதி பாபு, நவீன் சந்திரா, ராஜேந்திர பிரசாத், நரேஷ், பானுஸ்ரீ மெஹ்ரா, சுமந்த், பூஜிதா, கமல் காமராஜூ, நதியா ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.
டீசர் வெளியானதை #missindia என்ற ஹேஷ்டேக்கும், இந்தப் படம் கீர்த்தி சுரேஷின் 20வது படம் என்பதால் #Keerthy20 என்ற ஹேஷ்டேக்கும் டிவிட்டரில் ட்ரென்ட்டாகி வருகின்றன.