தமிழ் திரையுலகில் சிறந்த நடிகர்களில் ஒருவர் ஸ்ரீகாந்த். 2002-ம் ரோஜா கூட்டம் படத்தின் மூலம் அறிமுகமானவர். தற்போது இவர் நடித்துள்ள படம் மிருகா.
ஜாகுவார் ஸ்டுடியோஸ் சார்பில் பி.வினோத் ஜெயின் தயாரித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் பார்த்திபன் இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த்துடன் ராய்லட்சுமி மற்றும் தேவ் கில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கான கதை, திரைக்கதை, வசனத்தை இயக்குனர் பன்னீர்செல்வம் எழுதியுள்ளார்.

இந்த படத்தின் மோஷன் டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.


இந்நிலையில் படத்திலிருந்து ஐ யம் பேட் பாய் பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. ரஞ்சித் மற்றும் ஸ்வேதா மோகன் பாடிய இந்த பாடல் வரிகளை ARP ஜெயராம் எழுதியுள்ளார். திங்க் பியூட்ச்சர் ஸ்டுடியோஸ் இந்த பாடலின் VFX பணிகளை மேற்கொண்டனர். தனுஷ் இந்த பாடலை வெளியிட்டார்.

[youtube-feed feed=1]