மிராஜ் 2000 போர் விமான விபத்தில் உயிரிழந்த பைலட் மனைவியின் நெஞ்சை உருக்கும் முகநூல் பதிவு…!

Must read

பெங்களூரு:

மிராஜ் 2000 ரக போர் விமானமானது கடந்த 1ந்தேதி, பயிற்சியின்போது,  மத்தியஅரசு நிறுவனமான ஹால் (HAL – Hindustan Aeronautics Limited – Aerospace company)  நிறுவனத்துக்கு சொந்தமான விமான நிலையம் அருகே இந்த விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது.

விமானத்தை இயக்கிய விமானிகளான  ஸ்க்ரூட்ரான் தலைவர் சித்தார்த் நேகி மற்றும்  சமீர் அப்ரோல் ஆகியோர்  இறந்து விட்டனர். இந்த சம்பவம் உயிரிழந்த பைலட்களின் குடும்பங்க ளுக்கு பேரிடியாக அமைந்தது.

இந்த நிலையில்,  விமான விபத்தில் உயிரிழந்த பைலட் அப்ரோல்  மனைவி எழுதிய கடிதம்  நெஞ்சை உருக்கும் வகையில் அமைந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் நகரைச் சேர்ந்தவர்  சமீர் அப்ரோல்.  ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்த சமீபர், ராணுவத்தில் சேருவதை தனது கனவாக நினைத்து,  ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று அதில் அதிகாரியும் ஆனார்.  இவருக்கும், அவரது தோழி  கரீமாவுக்கும் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.  திருமணம் முடிந்து 3 ஆண்டுகளே ஆன நிலையில், காதல் கணவரின் இழப்பு அவரை பெரும் சோகத்தில் தள்ளி உள்ளது.

தனது நினைவுகள் குறித்து, தனது முகநூல் பக்கத்தில் கரீமா சோகமான பதிவை ஒன்றை பதிவு செய்துள்ளார். அதை படிப்பவர்களின் கண்களில் கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடும் வகையில் அந்த பதிவு உள்ளது.

அதில்,  “ தன் கணவன், இந்த தேசத்திற்காக தன் உயிரையும் கொடுப்பேன் என்று ஏற்கெனவே சொன்னதையே தற்போது நிறைவேற்றி உள்ளார். அவரது உடல் அரசு மரியாதையுடன் தேசியக் கொடி போர்த்தப்பட்டு இருப்பதை பார்த்துபோது சோகத்தில் உறைந்து போனேன். இதுபோல பல ராணுவ வீரர்களின் குடும்பங்கள் இருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் விபத்துக்கான காரணத்திற்கு அரசு பதிலளிக்க வேண்டும்” எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

 

More articles

Latest article