பெங்களூரு:
பெங்களுருவில் இன்று மிராஜ் 2000 ரக போர் விமானம் திடீரென விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் விமானத்தை ஓட்டிய விமானி பலியானதாக கூறப்படுகிறது.
மத்தியஅரசு நிறுவனமான ஹால் (HAL – Hindustan Aeronautics Limited – Aerospace company) நிறுவனத்துக்கு சொந்தமான விமான நிலையம் அருகே இந்த விமானம் விழுந்து நொறுங்ககியது.
மிராஜ் 2000 ரக போர் விமானமானது இன்று காலை பயிற்சியின்போது சுமார் 10.30 மணி அளவில், எச்ஏஎல் விமான நிலையத்துக்கு அருகே விழுந்து விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக விமானம் தீப்பிடித்து எரிந்தது. விமானத்தினுள் இருந்து 2 பைலட்கள் இருந்ததாகவும் அவர்கள் மீட்கப்பட்டதாகவும் முதல் கட்ட தகவல் வெளியானது. இந்த தற்போது ஒரு விமானனி ஒருவர் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.
விமானத்தில் பயணித்த விமானிகள், ஸ்க்ரூட்ரான் தலைவர் சித்தார்த் நேகி மற்றும் ஸ்க்ரூட்ரான் தலைவர் சமீர் அபோரால் என அடையாளம் காணப்பட்டுள்ள னர். இதில் ஸ்குட்ரான் தலைவர் சித்தார்த் நேகி இறந்து விட்டதாக கூறப்படுகிறது.
சோதனை ஓட்டத்தின்போதே இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடடினயாக சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்பு படையினர், விமான விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மிராஜ் 2000 ரக போர் விமானம் தீப்பிடித்து எரியும் காட்சி (வீடியோ)