சென்னை,
முதல்வர் ஜெயலலிதா விரைவில் டிஸ்சார்ஸ் ஆவார், இது அதிசயம் என்று முதல்வர் உடல்நிலை குறித்து சுப்பிரமணியசாமி தனது டுவிட்டர் வலைதளத்தில் கூறி உள்ளார்.
முன்னாள் தமிழக ஜனதா கட்சி தலைவரும், தற்போதைய பாரதிய மாநிலங்களவை உறுப்பினரும் பாஜக மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சாமி முதல்வர் உடல்நிலை குறித்து அவ்வப்போது சர்ச்சை பதிவுகள் தனது டுவிட்டர் வளைதளத்தில் வெளியிட்டு வந்தார்.
சுப்பிரமணியன்சுவாமி என்றாலே சர்ச்சையின் நாயகன் எனலாம். காரணம், இந்திய அரசியலில் யாரையாவது பலிகடா ஆக்க வேண்டுமாயின், அவர்கள் குறித்து ஏதாவது சர்ச்சையாக கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை உண்டாக்கி காலி செய்து விடுவார்.
இவர் தனது டுவிட்டர் வலைதளத்தில் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவ்வப்போது ஏதாவது தகவல் போட்டு பரபரப்பை உண்டாக்கி விடுவார்.
தமிழக முதல்வர் கடந்த மாதம் 22ந்தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலே, டில்லி எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் மற்றும் அப்பல்லோ மருத்துவ குழுவினர் இணைந்து தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தற்போது அவருக்கு சிங்கப்பூர் பெண் மருத்துவர்கள் மூலம் பிசியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக அவரது உடல்நலம் சீராகி உள்ளதாகவும்,தானாகவே உணவு உண்கிறார் என்றும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் அப்பல்லோ நிர்வாகம் மற்றும் மூத்த அதிமுக தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், பாரதியஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி தனது டுவிட்டர் வலை தளத்தில், ஜெயலலிதா நினைவு திரும்பி உள்ளார். இது அதிசயம் என்று கருத்துகூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
ஏற்கனவே, முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவது குறித்து,
அவரை சிங்கப்பூர் அழைத்து சென்று சிகிச்சை மேற்கொள்ளுங்கள், அவரது உடல்நிலை மோசமான நிலையில் இருப்பதாக டுவிட் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதையடுத்து, தமிழகத்தில் அதிமுக அரசை கலைத்து விட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.
அதையடுத்து இன்று செய்துள்ள டுவிட்டில், ஜெயலலிதா பக்தர்கள் மகிழ்ச்சியாக இருங்கள், ஏனென்றால் ஜெயலலிதா சுயநினைவுக்கு திரும்பியதாகவும் விரைவில் டிஸ்சார்ஜ் ஆக உள்ளார் எனவும் அறிந்துள்ளேன். அப்படி நடந்தால் அது மிராக்கிள் என கூறியுள்ளார்.
அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே, சொத்துகுவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலிதா கர்நாடக ஐகோர்ட்டால் விடுதலை செய்யப்பட்டது குறித்து, முதல்வர் தனது ராஜினாமாவை ரெடியாக வைத்திருங்கள் என்று டுவிட் செய்து பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.