சென்னை,

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் 10ந்தேதியுடன் முடிவடைவதாக இருந்த நிலையில், வரும் 15ந்தேதேதி வரை நீட்டிப்பு செய்து தமிழக அரசு அறிவித்து உள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 1ம் வகுப்பு முதல் பி.எச்.டி. படிப்பு வரை (தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி, மருத்துவம் உள்பட) படிக்கும் முஸ்லிம், கிறிஸ்தவம், சீக்கிய புத்த பார்சி மற்றும் ஜெயின் மதங்களை சேர்ந்த மாணவமாணவிகள் கல்வி உதவித் தொகை பெற www.scholarships.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் 2019-20ம் ஆண்டுக்கு பள்ளிப்படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி, வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கு வருகிற 15ந்தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. தகுதி வாய்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறுஅதில் கூறப்பட்டு உள்ளது.