டெல்லி: மதுபான ஊழல் முறைகேடு தொடர்பாக, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில், அவரை மீண்டும் விசாரணைக்கு ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. இதனால் அவர் கைது செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்த பரபரப்பான சூழலில் சிசோடியா விசாரணைக்கு நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.
டெல்லி துணை முதல்வர் மற்றும் கல்வித்துறை அமைச்சரான மணிஷ் சிசோடியா மீது புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டப் பட்டது. மதுபான வியாபாரிகளுக்கு உரிமம் வழங்கும் டெல்லி அரசின் கொள்கை, சில வியாபாரிகளுக்கு சாதகமாக இருப்பதாக சிபிஐ குற்றம் சாட்டியது,
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ஆம் ஆத்மி கடுமையாக மறுத்து வருகிறது. மேலும், . ஆம் ஆத்மியை உடைக்க தன்னுடன் பாஜக பேரம் பேசியதாக மணிஷ் சிசோடியா குற்றம் சாட்டி வருகிறார்.
இந்த நிலையில், டெல்லி மாநில துணைநிலை ஆளுநரின் உத்தரவின் பேரில், டெல்லியில் மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறத. இந்த வழக்கு தொடர்பாக, டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீடு உள்ளிட்ட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அதையடுத்து மணீஷ் சிசோடியா மற்றும் 14 பேர் மீது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ எப்ஐஆர் பதிவு செய்தது. இந்த வழக்கில் ஆந்திரா ஆளுங்கட்சியைச் சேர்ந்த எம்பி மகுண்டா சீனிவாச ரெட்டியின் மகன் ராகவ்வையும் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. அதேபோல் தெலங்கானா முதல்வரின் மகள் கவிதாவை சிபிஐ விசாரணை செய்தது குறிப்பிடதக்கது.
இந்த நிலையில், மதுபான ஊழல் முறைகேடு தொடர்பாக, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
இந்த பரபரப்பான சூழலில், மதுக்கொள்கை விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும் படி சிபிஐ மணிஷ் சிசோடியாவிற்கு சம்மன் அனுப்பியது. . மணீஷ் சிசோடியாவுக்கு எதிரான புதிய ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆனால், மார்ச் மாதம் டெல்லி ப்டஜெட் கூட்டத்தொடர் நடக்க இருக்கிறது. எனவே அப்பணிகளில் வேலையாக இருப்பதால் தன்னால் ஆஜராகமுடியாது எனவே கால அவகாசம் வழங்குமாறு மணிஷ் சிசோடியா கோரிக்கை வைத்தார். அதை ஏற்று அவர் 21ந்தேதி ஆஜராக விலக்கு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வரும் 26ந்தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிசோடியா, “சிபிஐ மீண்டும் என்னை விசாரணைக்கு அழைத்துள்ளது. மத்திய அரசு எனக்கு எதிராக சிபிஐ, அமலாக்க துறை உள்ளிட்ட ஏஜென்சிகள் மூலம் முழு அதிகாரத்தையும் கட்டவிழ்த்துவிட்டனர். என் வீட்டில் சோதனை நடத்தினர், எனது வங்கி லாக்கரை சோதனை செய்தனர். ஆனால் இன்னும் எனக்கு எதிராக எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை. விசாரணைக்கு நான் எப்போதும் ஒத்துழைத்து வருகிறேன், தொடர்ந்து செய்வேன்.
டெல்லியின் குழந்தைகளுக்கு நான் நல்ல கல்வியை ஏற்பாடு செய்துள்ளேன். அவர்கள் அதை நிறுத்த விரும்புகிறார்கள். பாஜகவினர் என்னை பழிவாங்க வேண்டுமானால் கைது செய்ய முடியும், ஆனால் டெல்லி மக்களின் பட்ஜெட்டை தடுத்து நிறுத்த முடியாது. பாஜகவுக்கு சொந்த அரசியல் இருக்கலாம், ஆனால் சிபிஐ அதிகாரிகள் எனது கோரிக்கையை செவிசாய்ப்பார்கள் என்று நான் முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்வேன், ஓடிப்போகவில்லை. பட்ஜெட் பணிகள் தேக்கமடையும் என்று தான் சொல்கிறேன். அதனால்தான் பிப்ரவரி இறுதி வரை சிபிஐயிடம் கால அவகாசம் கேட்டுள்ளேன்” என்று மணிஷ் சிசோடியா கூறினார்.
இந்த நிலையில் வருகிற 26ம் தேதி கண்டிப்பாக விசாரணைக்கு ஆஜராக சிபிஐ உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் சிசோடியா கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தலைநகர் தகவல்கள் தெரிவிக்கின்றன.