சென்னை: மருது பாண்டியர்களின் நினைவுநாளையொட்டி, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள மருதுபாண்டியரின் சிலைகளுக்கு அமைச்ச்ரகள், அதிகாரிகள் மாலை அணிவித்துமரியாதை செலுத்தினர்.

மருது பாண்டியர்களின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, இன்று , கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள மருதுபாண்டியரின் சிலைகளுக்கு காலை 9.30 மணியளவில் தமிழ்நாடு அரசின் சார்பில், அமைச்சர் பெருமக்கள்,மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சேகர்பாபு, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா, துணைமேயர் சுரேஷ்குமார், திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டன்ர்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
சிவகங்கைச் சீமையின் வீரத்துக்கு எடுத்துக்காட்டாக இம்மண்ணில் நிலைத்திருக்கும் மருது சகோதரர்கள் நினைவு நாள்.
ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராடும் உணர்வை அந்நாளிலேயே விதைத்து, தலைசிறந்த தியாகிகளாகத் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட மருதிருவரின் நினைவை என்றும் போற்றுவோம்!
இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு முன்னோடியாகத் தமிழர்கள் முன்னின்று உயிர்நீத்த வரலாற்றைத் தொடர்ந்து சொல்லுவோம்!
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.