சென்னை: சென்னையில் தனியார் பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிலையில், போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள், இன்று அதிகாலையிலேயே போராட்டத்தில்குதித்தனர். திமுகவின் கூட்டணி கட்சியான சிஐடியு, சென்னையில் உள்ள போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகமான பல்‘லவன் இல்லம் முன்ஹபு திரட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், சென்னையில் தனியார் பேருந்து இயக்க டெண்டர் விடப்பட வில்லை,பேருந்துகள் தனியார் மயமாக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், தற்போது விடப்பட்டுள்ள டெண்டர் ஆலோசகர்களை நியமிப்பதற்கான டெண்டர் மட்டுமே, இதனால் அரசின் எந்தவொரு திட்டங்களும் பாதிக்கப்படாது என்றவர், தேவை அதிகம் உள்ள வழித்தடங்களில் தனியார் பேருந்து களை இயக்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும். தனியார் பேருந்து விவகாரத்தில் முடிவு எடுக்கும் அதிகாரம் ஆளும் அரசிற்கே உள்ளது என கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் பல இடங்களில் அரசு பேருந்துகள் மட்டுமின்றி தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், தலைநகர் சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான பேருந்துகள் மட்டும் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. சென்னை முழுவதும் மொத்தமுள்ள 625 வழித்தடங்களில் சுமார் 3,436 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் தினசரி ஏறத்தாழ 30 லட்சம் மக்கள் பயணம் செய்கின்றனர்.
இந்த சென்னையில் தனியார் பேருந்து சேவையை இயக்க மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த ஆண்டு முதற்கட்டமாக 500 பேருந்துகள் Gross Cost Contract முறையில் சென்னையில் இயக்கப்படும். எதிர்வரும் 2025ம் ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் 500 கூடுதலாக்கப்படும். இந்த தனியார் பேருந்துகளானது தற்போது மாநகர பேருந்துகள் இயங்கும் வழித்தடங்களில் இயக்கப்படும்.
இந்த பேருந்துகளுக்கு இவ்வளவு கட்டணம் என்ற மாநகர போக்குவரத்துக் கழகம் நிர்ணயம் செய்யும். நிர்ணயித்த தொகையில் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவு வரம்பாக வைக்கப்படும். இந்த குறிப்பிட்ட வரம்பை கடந்து வசூல் ஆனால் அந்த தொகையானது மாநகராட்சிக்கு ஒப்படைக்கப்பட வேண்டும். குறைவாக வசூல் ஆனால் அதனை மாநகர போக்குவரத்து கழகம் ஈடுகட்டும் என அறிவிப்பு வெளியாது. இது போக்குவரத்துக்கழக தொழிலாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே ஓய்வுபெற்ற நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு அவர்களுக்குரிய ஓய்வூதியம் உள்பட மற்ற எந்தவொரு பணிப்பலன்களும் வழங்கப்படாத நிலையில், காண்டிராக்டு மூலமே பணிகளை மாநில அரசு நிரப்பி வருகிறது.
இந்த சூழலில், தனியார் பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்ற மாநகர போக்குவரத்து கழகத்தின் இந்த முடிவுக்கு, திமுக கூட்டணி கட்சிகளான கம்யுனிஸ்டு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இன்று காலை ‘சிஐடியு’ போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், இன்று காலை சென்னையில் உள்ள போக்குவரத்து பணிமனைகள் முன்பு போராட்டம் நடைபெற்றது. இன்று அதிகாலை 6 மணியளவில் சென்னை பல்லவன் இல்லத்தின் வெளியே சிஐடியு சங்கத்தை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். போக்குவரத்து துறை தனியார் மயமாக்காதே என்று முழக்கங்களையும் எழுப்பியுள்ளனர். இவ்வாறு தனியார் பேருந்துகள் இயக்கப்படுமானால் அரசு பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்து ஒரு கட்டத்தில் குறிப்பிட்ட வழித்தடங்களில் அரசு பேருந்துகளே இயக்கப்படாமல் போகும் அபாயம் ஏற்படலாம் எனவும் சிஐடியு அமைப்பினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசானது பொதுத்துறைகளை தனியார்மயமாக்குவதற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தற்போது மாநில அரசே இது போன்று தனியார்மயப்பாதையை ஊக்குவிக்கலாமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு அரசின் தனியார் மயம் முடிவுக்கு தொமுச மற்றும் அதிமுகவின் தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்கத்தினரும் நாளை போராட்டத்தில் ஈடுபட இருக்கின்றனர். அடுத்தடுத்த நாட்களில் இந்த போராட்டம் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், செய்தியளார்களை சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், பேருந்துகள் தனியார் மயமாக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று என்றவர் சென்னையில் தனியார் பேருந்து இயக்க சென்னை மாநகராட்சி டெண்டர் விடப்படவில்லை, தற்போது விடப்பட்டுள்ள டெண்டர் ஆலோசகர்களை நியமிப்பதற்காக மட்டுமே டெண்டர்விடப்பட்டுள்ளது. தனியார் பேருந்து இயக்கம் தொடர்பான சாதக, பாதகங்கள் ஆய்வு செய்யவே அறிக்கை வெபளியிட்டு உள்ளது. சாதக, பாதகங்கள் ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து ஆலோசனை நடத்தி 3 மாதத்தில் உரிய முடிவு எடுக்கப்படும்.
தனியார் பேருந்துகளால், அரசின் எந்தவொரு திட்டங்களும் பாதிக்கப்படாது. அரசு பேருந்துகள் தனியார் மயமாக்கப்படாது. தனியார் பேருந்து விவகாரம் குறித்து அதிமுக ஆட்சி காலத்தில் அரசிதழில் வெளியிடப்பட்டது. நடைமுறையில் இருக்கும் அரசு பேருந்துகள் சேவை நிறுத்தப்பட மாட்டாது.
மாணவர்கள், மகளிர், முதியோர்களுக்கான பேருந்து சலுகைகள் நிறுத்தப்படாது. மாணவர்கள், மகளிர், முதியோர்களுக்கான பேருந்து சலுகைகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். நாளையே தனியார் பேருந்துகள் இயக்கம் என்ற பதற்றத்தை ஏற்படுத்துவது தேவையில்லாத செயல். போக்குரத்து ஊழியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றவர், தேவை அதிகம் உள்ள வழித்தடங்களில் தனியார் பேருந்து களை இயக்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும். தனியார் பேருந்து விவகாரத்தில் முடிவு எடுக்கும் அதிகாரம் ஆளும் அரசிற்கே உள்ளது என கூறியுள்ளார்.
அமைச்சரின் விளக்கத்தில், சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்குவதற்கான சாதக, பாதகங்களை ஆராயவே டெண்டர் விடப்பட்டது என்று கூறியிருப்பது, சந்தேகத்தை கிளப்பி உள்ளது. தனியார் மயம் இல்லை எனும்போது, ஏன் அதற்கான சாதக பாகங்கள் குறித்து ஆராய வேண்டும் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அமைச்சரின் பதின் மூலம், தமிழ்நாடு அரசு விரைவில் சென்னையில் தனியார் பேருந்து சேகைளை தொடங்குதில் உறுதியாக இருப்பதாகவே தெரிகிறது.