திருவனந்தபுரம்

கேரள மாநிலத்தில் ஒமிக்ரான் மற்றும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்த போவதும் என கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ்  தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் இந்தியாவிலேயே கொரோனா முதன் முதலில் கண்டறியப்பட்டது. பிறகு படிப்படியாக மற்ற மாநிலங்களில் பரவ தொடங்கியது.  கொரோனா முதல் அலை முடிந்து 2வது அலை வீச தொடங்கி கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.  எனவே நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு பல மாதங்கள் நீட்டிக்கப்பட்டு காரணமாக மக்களின் வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பறிபோனது.

அதன் பின்னர் தொற்று குறைய ஆரம்பித்து தமிழகம், டில்லி, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியதால் முழு ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆயினும் கேரளாவில் மட்டும் கொரோனா குறையாமல் இருந்தது. பிறகு அங்கும் பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

கடந்த 2 மாதங்களுக்கு முன் தென்னாப்பிரிக்கா நாட்டில் கொரோனா உருமாற்றம் பெற்ற ஒமிக்ரான் வைரஸ் ஒருவருக்குப் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக உலகம் முழுவதும் பரவ தொடங்கி விட்டது. தற்போது இந்தியாவிலும் ஒமிக்ரான் மற்றும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கி விட்டது.

தற்போது கேரளாவில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருகிறது.  நேற்று மட்டும் 25 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டு இந்த வைரஸ் தாக்கியவர்கள் எண்ணிக்கை 305 ஆக உயர்ந்துள்ளது. இதில் 186 பேர் நோய் பரவல் குறைவாக உள்ள நாடுகளில் இருந்து வந்தவர்கள்.

ஆயினும் கேரளாவில் இதுவரை இரவுநேர ஊரடங்கோ, கடும் கட்டுப்பாடுகளோ விதிக்கப்படவில்லை. வழக்கம் போல் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன. இதனால் அடுத்து முழு ஊரடங்கு வருமோ என்ற அச்சத்தில் கேரள மக்கள் உள்ளனர்.

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் திருவனந்தபுரத்தில்

கொரோனா மற்றும் ஒமிக்ரான் பாதிப்பு கேரளாவில் அதிகரித்து வருகிறது.  ஆகவே நிபந்தனைகளைக் கடுமையாக்க அரசு தீர்மானித்துள்ளது.  அரசுக்கு இப்போதைக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தும் எண்ணம் இல்லை. ஊரடங்கின் மூலம் பொதுமக்கள் வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கும். ஆகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பதால் வெளி நாடுகளில் இருந்து வருபவர்கள் ஒரு வாரம் கட்டாய வீட்டு தங்கலில் இருந்து 8வது நாள் ஆடிபிசிஆர் பரிசோதனை நடத்தவேண்டும். ஒமிக்ரான் பரவல் குறைவாக உள்ள நாடுகளில் இருந்து வந்தவர்களுக்குத் தான் அதிக அளவு பரவியுள்ளது. ஆகவே வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டால் உடனே ஒமிக்ரான் பரிசோதனையும் நடத்தப்படும்”

எனத் தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]