சென்னை:

தமிழக முதல்வரும், அமைச்சர்களும் தவறான தகவல்களை அளிக்கும் சம்பவம் தமிழகத்தில் அடிக்கடி நடந்து வருகிறது. கம்ப ராமாயணத்தை எழுதியர் சேக்கிழார் என்று முதல்வர் பழனிச்சாமி கூறி அதிரடித்தார். இதேபோல் அமைச்சர்கள் பலரும் தவறான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த வகையில் தற்போது மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஒரு தொலைக்காட்சியில் பேசினார். அப்போது புரட்சி கவிஞர் பாரதிதாசன் பாடலை தவறாக உச்சரித்தார். இந்த செய்தி சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

‘‘பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைந்தால் சங்கே முழங்கு’’ என்று தொலைக்காட்சியில் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். ஆனால், அந்த வரி ‘‘பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைந்தால் சங்காரம் நிசமென்றூது சங்கே’’ என்பதாகும் என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

[youtube-feed feed=1]