சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டிரோன் மூலம் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சென்னை ஓட்டேரி பகுதியில் டிரோன் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணியை அமைச்சர் சேகர்பாபு மாநகராட்சி மேயர் பிரியா முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
சென்னை மாநகரம் முழுவதும் கொசுத்தொல்லை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் டெங்கு, டைபாய்டு போன்ற காய்ச்சல்களும் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க, சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், டிரோன்கள் முலம் நீர் நிலைகள் மீது கொசுமருந்து தெளிக்கும் பணிகளையும் முன்னெடுத்து வருகிறது. மேலும்இ ஒவ்வொரு வீடுகளிலும் ஆய்வு மேற்கொண்டு கொசு முட்டை உற்பத்தியை தடுக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வது உள்ளிட்டட் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதே போல தற்போது, ஊழியர்களால் செல்ல முடியாமல் இருக்கும் இடங்களை கண்டறிந்து அங்குள்ள கொசுக்களை கொசு மருந்து தெளித்து அழிக்கும் நோக்கில் புதிய வசதியை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், சென்னையில், ஓட்டேரி நல்லா கால்வாய் பகுதியில் டிரோன்கள் முலம் கொசு மருந்து தெளிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணியினை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாநகராட்சி அதிகாரிகள் கொசுமருந்தை நிரப்ப, டிரோன் ஆபரேட்டர்கள் அதனை இயக்கி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.